வரணியில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 16-09-2021 | 1:22 PM
Colombo (News 1st) கொடிகாமம் - வரணி பகுதியில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி, குடமியன் ஆதிசிவன் கோவிலை அண்மித்த பகுதியில் இருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் உள்ள பற்றைப்பகுதியில் வெடிபொருட்கள் சில காணப்படுவதாக நேற்றிரவு கொடிகாமம் பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவை மீட்கப்பட்டுள்ளன. வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு நேற்று (15) முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிபொருட்கள் செயலிழக்க வைக்கும் பிரிவினரால் இன்று குறித்த வெடிபொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.