பல பகுதிகளில் சுற்றிவளைப்பு: போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 16 பேர் கைது

பல பகுதிகளில் சுற்றிவளைப்பு: போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 16 பேர் கைது

பல பகுதிகளில் சுற்றிவளைப்பு: போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 16 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2021 | 11:40 am

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான, மருதானை, பொரளை, அநுராதபுரம், ஜா-எல, கெஸ்பேவ, எம்பிலிப்பிட்டிய, வெலிசறை, கொம்பனித்தெரு, வத்தளை, திவுலப்பிட்டிய உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா-எல ஜொசிட்டாவத்த பகுதியில் 15 கிராம் 101 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய உடகம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், T 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 10 ரவைகள் மற்றும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிபிட்டியை சேர்ந்த 39 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, பஞ்சிகாவத்தை பகுதியில் 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,85,000 ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 250 கிராமிற்கும் அதிக நிறையுடையதென பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்