சீனி இறக்குமதிக்கு அனுமதி

சீனி இறக்குமதிக்கு அனுமதி

சீனி இறக்குமதிக்கு அனுமதி

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2021 | 11:22 am

Colombo (News 1st) சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

சீனி இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சினூடாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனி இறக்குமதிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இதனால் அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்பட்டமையால், சீனிக்கான கட்டுப்பாட்டு விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது கையிருப்பிலுள்ள சீனி, எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கான நுகர்விற்கு போதுமானது என கூட்டுறவு மற்றும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 1,50,000 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்