இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு வௌியக பொறிமுறை தேவையில்லை: ஜயநாத் கொலம்பகே

இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு வௌியக பொறிமுறை தேவையில்லை: ஜயநாத் கொலம்பகே

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2021 | 7:39 pm

Colombo (News 1st) இலங்கையின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வௌியக பொறிமுறையொன்றை உருவாக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை என வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இன்று (16) அறிவித்தார்.

‘ஐக்கிய நாடுகளின் ஜெனிவா மாநாடு மற்றும் இலங்கையின் வௌிநாட்டுக் கொள்கை’ என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

நாட்டின் பொறிமுறை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது, வெளியக பொறிமுறை பயனற்றது என கருதுவதாக ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்