அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி

அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி

அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2021 | 3:44 pm

Colombo (News 1st) நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும் மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக SDB வங்கி, DFCC வங்கி மற்றும் NDB வங்கி உள்ளிட்ட இலங்கை வங்கிகளுக்கு U.S. International Development Finance Corporation (DFC) வழங்கும் 265 மில்லியன் டொலர் நிதியின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டமைப்பினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்