மூதூரில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுப்பு

மூதூரில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுப்பு

மூதூரில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2021 | 6:49 pm

Colombo (News 1st) திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மேம்கமம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு அருகில் இருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கிளைமோர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இரண்டு கிளைமோர் குண்டுகளையும் செயலிழக்க செய்வதற்காக மூதூர் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

திருகோணமலை தலைமையக விசேட அதிரடிப்படையினர் குறித்த கிளைமோர் குண்டுகளை செயலிழக்க செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்