நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜட்டால் மான்னப்பெரும இராஜினாமா

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜட்டால் மான்னப்பெரும இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2021 | 10:27 am

Colombo (News 1st) நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி ஜட்டால் மான்னப்பெரும இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் அவர் கையளித்துள்ளார்.

உயர்மட்ட முகாமைத்துவத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவது புத்திசாதுர்யமற்றது என்பதால், தாம் பதவியை இராஜினாமா செய்வதாக  மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

உயர்மட்ட முகாமைத்துவம் மேற்கொள்கின்ற தீர்மானங்களில் தமக்கு திருப்தியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு மின்னஞ்சல் செய்ததாக கலாநிதி மான்னப்பெரும குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்