கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ள வட கொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ள வட கொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ள வட கொரியா

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2021 | 4:10 pm

Colombo (News 1st) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டை ஏவி வட கொரியா பரிசோதித்துள்ளது.

இதனை தென் கொரிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏதோவொரு பொருள் ஏவப்பட்டதாகவும், அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாமெனவும் ஜப்பானும் தெரிவித்துள்ளது.

இது ஒரு மூர்க்கத்தனமான செயலென விமர்சித்துள்ள ஜப்பானிய பிரதமர் Yoshihide Suga, இது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலானது என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வார காலத்தினுள் வட கொரியா ஏவுகணைகளை பரீட்சிக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளை தாக்கவல்ல, நீண்டதூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட, சீர்வேக ஏவுகணையொன்றை வட கொரியா நேற்று முன்தினம் (13) ஏவி பரீட்சித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்