இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இராஜினாமா

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2021 | 2:13 pm

Colombo (News 1st) சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமது பதவி இராஜினாமாவிற்கான பரிந்துரையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் லொஹான் ரத்வத்தே கோரியிருந்தார்.

அமைச்சு தொடர்பாக ஊடகங்களில் வௌியாகும் தகவல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்ததாக லொஹான் ரத்வத்தே தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்று இந்த தீர்மானத்தை அவர் மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்