அரசுடைமையாக்கப்பட்ட 13,000 கிலோ மஞ்சள் சந்தைக்கு விடுவிக்கப்படவுள்ளது

அரசுடைமையாக்கப்பட்ட 13,000 கிலோ மஞ்சள் சந்தைக்கு விடுவிக்கப்படவுள்ளது

அரசுடைமையாக்கப்பட்ட 13,000 கிலோ மஞ்சள் சந்தைக்கு விடுவிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2021 | 11:06 am

Colombo (News 1st) அரசுடைமையாக்கப்பட்ட 13,000 கிலோ மஞ்சள் இலங்கை வாசனை திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த மஞ்சள் வழங்கப்பட்டுள்ளது.

சுங்க திணைக்களத்திற்குரிய கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் மஞ்சளை பெற்றுக்கொண்டதாக இலங்கை வாசனை திரவியங்கள் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி மஹேஷ் குணரத்ன தெரிவித்தார்.

பெற்றுக்கொள்ளப்பட்ட மஞ்சளின் தரத்தை, ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் ஆய்வுக்கூடத்தினூடாக பரிசோதித்து, உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மஞ்சளை சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வாசனை திரவியங்கள் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி மஹேஷ் குணரத்ன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்