by Staff Writer 15-09-2021 | 11:29 AM
Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் கீழ்த்தரமாகவும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இராஜாங்க அமைச்சரின் இழிவான நடத்தையை கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய நடத்தை நாட்டில் தற்போது காணப்படும் அராஜக நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் இந்த நடத்தை நாட்டின் மனித உரிமைகளின் பின்னடைவு எனவும் அவர் கூறியுள்ளார்.