மனித உரிமைகள் பேரவையில் GL.பீரிஸ் உரையாற்றவுள்ளார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் G.L.பீரிஸ் உரையாற்றவுள்ளார்

by Bella Dalima 14-09-2021 | 11:58 AM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் இன்று (14) உரை நிகழ்த்தவுள்ளார். காணொளி தொழில்நுட்பத்தினூடாக அவர் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இலங்கை தொடர்பில் நேற்று (13) முன்வைத்த கருத்துக்களுக்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இன்று பதிலளிக்கவுள்ளார். உணவு பாதுகாப்பிற்காக ஆகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை, சிவில் செயற்பாடுகளில் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் செயல் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் நேற்று தெரிவித்தார். மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் இன்றைய உரையில் தௌிவுபடுத்தவுள்ளார்.

ஏனைய செய்திகள்