முதியோர் கொடுப்பனவு 17, 18 ஆம் திகதிகளில் பெற்றுக்கொடுக்கப்படும்: தபால் திணைக்களம் அறிவிப்பு

முதியோர் கொடுப்பனவு 17, 18 ஆம் திகதிகளில் பெற்றுக்கொடுக்கப்படும்: தபால் திணைக்களம் அறிவிப்பு

முதியோர் கொடுப்பனவு 17, 18 ஆம் திகதிகளில் பெற்றுக்கொடுக்கப்படும்: தபால் திணைக்களம் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 10:54 am

Colombo (News 1st) செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு எதிர்வரும் 17 மற்றம் 18 ஆம் திகதிகளில் பெற்றுக்கொடுக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான வசதிகள் அனைத்து தபால் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் நிலையங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, திங்கள், செவ்வாய், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இதுவரை 500 தபால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 50 தபால் நிலையங்களின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் கூறினார்.

இதனால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்