நெல் கொள்வனவிற்கான புதிய விலைகள் அறிவிப்பு

நெல் கொள்வனவிற்கான புதிய விலைகள் அறிவிப்பு

நெல் கொள்வனவிற்கான புதிய விலைகள் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 10:48 am

Colombo (News 1st) இன்று (14) முதல் அமுலாகும் வகையில் நெல் கொள்வனவிற்கான புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாட்டரிசி நெல் ஒரு கிலோ 55 ரூபாவிற்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது நெல் கொள்வனவிற்கான புதிய விலையை அறிவிப்பதற்குரிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் விவசாய நிலத்திற்கே சென்று ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லை 55 ரூபா வீதம் கொள்வனவு செய்யுமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

இதுவரை ஒரு கிலோகிராம் நட்டரிசி நெல்லை 50 ரூபாவிற்கே நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected].lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்