ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் 17 ஆம் திகதி தீர்மானம்

ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் 17 ஆம் திகதி தீர்மானம்

ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் 17 ஆம் திகதி தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 11:07 am

Colombo (News 1st) ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரனை குறித்து எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (17) தீர்மானிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு கூடி தீர்மானிக்கும் என அவர் கூறினார்.

அதன் பின்னர் ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானியை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார்.

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதற்கான எழுத்து மூல அறிவிப்பை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டகொட அண்மையில் தனது பதிவயை இராஜினாமா செய்தார்.

பசில் ராஜபக்ஸவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காகவே , ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்