சன்ஷைன் சுத்தா கொலை: இதுவரை 3 சந்தேகநபர்கள் கைது

சன்ஷைன் சுத்தா கொலை: இதுவரை 3 சந்தேகநபர்கள் கைது

சன்ஷைன் சுத்தா கொலை: இதுவரை 3 சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 12:14 pm

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தற்காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினருமான சன்ஷைன் சுத்தாவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹங்கம – மிதிகம பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வெலிகம பகுதியில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரின் சாரதியாக செயற்பட்டவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அமில பிரசங்க ஹெட்டிஹேவா எனப்படும் சன்ஷைன் சுத்தா கடந்த 3 ஆம் திகதி மிரிஸ்ஸ – ஹேன்வலவில் அமைந்துள்ள, பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிய சந்தர்ப்பத்தில் கொட்டவில – வரக்காபிட்டிய பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சன்ஷைன் சுத்தாவுடன் தொடர்பில் இருந்த பெண்ணின் கணவரும் கொலைக்கு உதவியமை மற்றும் ​சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்