இலஞ்சம் வழங்கி தேர்தலில் வென்றால் பதவி பறிபோகும்: விசேட தீர்ப்பு வழங்கிய நீதிபதி 

இலஞ்சம் வழங்கி தேர்தலில் வென்றால் பதவி பறிபோகும்: விசேட தீர்ப்பு வழங்கிய நீதிபதி 

இலஞ்சம் வழங்கி தேர்தலில் வென்றால் பதவி பறிபோகும்: விசேட தீர்ப்பு வழங்கிய நீதிபதி 

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 9:40 pm

Colombo (News 1st) வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கி தேர்தலில் வெற்றி பெற்றால், பதவியை இழக்க நேரிடும் என்ற விசேட தீர்ப்பொன்றை மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க வழங்கியுள்ளார்.

PAFFREL அமைப்பு மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் ஆகியன தாக்கல் செய்த வழக்கொன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குறித்த உறுப்பினரின் பதவியை செல்லுபடியற்றதாக்கி, அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற உறுப்பினருக்கு அந்த பதவியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்ளும் போது, தகவல் அறியும் சட்டம் மிகவும் உதவியதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்