அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 1:20 pm

Colombo (News 1st) அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத் தொகுதிக்கு அருகில் பல விதமான கத்திகள், கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்திகளில் சில வாஷிங்டனில் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்வஸ்திக் மற்றும் தீவிரவாத கொள்கை சின்னங்கள் வரையப்பட்ட வாகனமொன்றிலிருந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வலதுசாரிகள் முன்னெடுக்கவுள்ள பேரணியில் அமைதியின்மை ஏற்படக்கூடுமென்ற அச்சம் நிலவி வரும் நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்