அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் லசித் மாலிங்க ஓய்வு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் லசித் மாலிங்க ஓய்வு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் லசித் மாலிங்க ஓய்வு

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 7:16 pm

Colombo (News 1st) கிரிக்கெட் உலகின் யோக்கர் ஜாம்பவான் லசித் மாலிங்க T20 போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் தளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ள அவர், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தமக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள லசித் மாலிங்க, இனிவரும் காலங்களில் தமது அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

84 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மாலிங்க 107 விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணி முதற்தடவையாக T20 உலகக்கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்