by Bella Dalima 13-09-2021 | 3:08 PM
Colombo (News 1st) பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்த 6 நாட்களேயான சிசுவின் இறுதிக்கிரியைகள் நேற்று (12) நடைபெற்றன.
கடந்த 7 ஆம் திகதி பிறந்த குழந்தை, சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சிசுக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
சிசு உயிரிழந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிசுவின் இறுதிக்கிரியைகள் பலாங்கொடை தஹமான தகனசாலையில் நடைபெற்றன.