சீனாவின் Life Science பரிசை வென்றார் மலிக் பீரிஸ்

சீனாவின் Life Science பரிசை வென்றார் பேராசிரியர் மலிக் பீரிஸ்

by Bella Dalima 13-09-2021 | 11:08 AM
Colombo (News 1st) பேராசிரியர் மலிக் பீரிஸிற்கு 2021 ஆம் ஆண்டிற்கான எதிர்கால விஞ்ஞான பிரிவின் கீழ் Life Science பரிசு சீனாவினால் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மலிக் பீரிஸிற்கும் சீனாவின் பேராசிரியரான Yuen Kwok-yung-இற்கும் இம்முறை இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பேராசிரியர் மலிக் பீரிஸிற்கும் பேராசிரியர் Yuen Kwok-yung-இற்கும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு கிட்டியுள்ளது. 2003 ஆம் ஆண்டில் SARS-CoV-1 வைரஸ் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகள் ஊடாக மேற்கொண்ட கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒவ்வொரு பிரிவுகளுக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அதாவது, Life Science Prize, Physical Science Prize மற்றும் Mathematics and Computer Science Prize எனும் பிரிவுகளில் வழங்கப்படுகிறது.