பிறந்து 6 நாட்களேயான சிசு COVID தொற்றுக்கு பலி

பிறந்து 6 நாட்களேயான சிசு COVID தொற்றுக்கு பலி

எழுத்தாளர் Bella Dalima

13 Sep, 2021 | 3:08 pm

Colombo (News 1st) பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்த 6 நாட்களேயான சிசுவின் இறுதிக்கிரியைகள் நேற்று (12) நடைபெற்றன.

கடந்த 7 ஆம் திகதி பிறந்த குழந்தை, சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சிசுக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

சிசு உயிரிழந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிசுவின் இறுதிக்கிரியைகள் பலாங்கொடை தஹமான தகனசாலையில் நடைபெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்