சன்ஷைன் சுத்தா கொலை தொடர்பில் ஒருவர் கைது

சன்ஷைன் சுத்தா கொலை தொடர்பில் ஒருவர் கைது

சன்ஷைன் சுத்தா கொலை தொடர்பில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Sep, 2021 | 12:11 pm

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினருமான ‘சன்ஷைன் சுத்தா’ என்றழைக்கப்படும் அமில பிரசங்க ஹெட்டியாராச்சி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சன்ஷைன் சுத்தாவுடன் தொடர்புகளை பேணிவந்த பெண் ஒருவரின் கணவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொலைக்கு உதவியமை மற்றும் ​சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் மிரிஸ்ஸ, ஹேன்வல பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹேன்வல பகுதியிலுள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திரும்பிய போது, கொட்டவில – வரக்காபிட்டிய பகுதியில் வைத்து சன்ஷைன் சுத்தா கடந்த 3 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்