கெட்டந்தொல பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்தது கொள்கலன் லொறி

கெட்டந்தொல பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்தது கொள்கலன் லொறி

எழுத்தாளர் Bella Dalima

13 Sep, 2021 | 2:25 pm

Colombo (News 1st) இரத்தினபுரி – கெட்டந்தொல பகுதியில் கொள்கலன் லொறியொன்று  பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதிவேகத்தில் பயணித்த குறித்த கொள்கலன் லொறி கெட்டந்தொல பாலம் ஒன்றின் மேல் பயணித்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து கீழே வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

மரக்கறி மற்றும் பழங்களுடன் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் போது கார் ஒன்று பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், அதிலிருந்த சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்