அஜித் நிவாட் கப்ராலின் வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க தீர்மானம் 

by Staff Writer 13-09-2021 | 12:46 PM
Colombo (News 1st) அஜித் நிவாட் கப்ராலின் பதவி விலகலால் ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்காலத்தில் ஜயந்த கெட்டகொடவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டகொட, சமீபத்தில் பதவி​யை இராஜினாமா செய்தார். பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக ஜயந்த கெட்டகொட பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்