T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Sep, 2021 | 8:26 pm

Colombo (News 1st) சர்வதேச T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.

தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் நான்கு மேலதிக வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். குசல் ஜனித் பெரேரா , தினேஷ் சந்திமால் , அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, ச்சரித் அசலங்க உள்ளிட்டோர் இலங்கை குழாத்தில் பிரதான துடுப்பாட்ட வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். வனிந்து ஹசரங்க மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் சகலதுறை வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

நுவன் பிரதீப் , துஷ்மந்த சமீர , லஹிரு மதுஷங்க , சாமிக்க கருணாரத்ன ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன் பிரவீன் ஜயவிக்ரம மற்றும் மஹூஷ் தீக்சன ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

லஹிரு குமார , பினுர பெர்னாண்டோ , அகில தனஞ்சய , புல்லின தரங்க உள்ளிட்டோர் மேலதிக வீரர்களாக குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ளது.

2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த லசித் மாலிங்க மற்றும் அஞ்சலோ மெத்யூஸிற்கு இந்த குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்