by Bella Dalima 12-09-2021 | 10:48 AM
Colombo (News 1st) 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
1,05,44,229 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
30 வயதிற்கு மேற்பட்ட 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.