வாய்த்தர்க்கம் மோதலானது: 27 வயது இளைஞர் கொலை

வாய்த்தர்க்கம் மோதலானது: 27 வயது இளைஞர் கொலை

by Bella Dalima 12-09-2021 | 11:57 AM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த - பெலென்கஹஹேன சந்திக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்திருந்த ஒருவர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய மாகொல பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் அவரின் நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வலுப்பெற்ற நிலையில், தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.