கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது

by Bella Dalima 12-09-2021 | 10:41 AM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது. மேலும் 157 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தோரில் 60 வயதிற்கும் மேற்பட்ட 130 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 வயதிற்குட்பட்ட நால்வரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 2,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,83,280 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4,11,233 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.