மக்களை மையமாக கொண்ட நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் நிலைப்பாடு - ஜனாதிபதி ஊடக பேச்சாளர்

by Staff Writer 11-09-2021 | 4:13 PM
Colombo (News 1st) மக்களை மையமாகக் கொண்ட நாட்டை உருவாக்குவது ஜனாதிபதியின் நிலைப்பாடு என ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரிசி விலை தொடர்பில் ஜனாதிபதி சார்பாக வௌியிட்ட விசேட அறிக்கையின் போதே ஜனாதிபதி ஊடக பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார். நெல் ஆலை உரிமையாளர்கள், அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் பேசப்பட்டு வரும் தவறான கருத்துகள் தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த விசேட அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.