பலத்த காற்றினால் அம்பாறையில் 23 வீடுகள் சேதம்

பலத்த காற்றினால் அம்பாறையில் 23 வீடுகள் சேதம்

by Staff Writer 11-09-2021 | 1:56 PM
Colombo (News 1st) அம்பாறை - தமன பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 23 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது. நேற்று (10) மாலை வீசிய பலத்த காற்றினால் தேவாலஹிந்த பகுதியில் 21 வீடுகளுக்கும் திம்பிரிகொல்ல பகுதியில் 02 வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக தமன பிரதேச செயலாளர் உதார நாணாயக்கார தெரிவித்துள்ளார். தேவாலஹிந்த பகுதியில் 06 வீடுகளுக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள், இன்றைய தினம் (11) வழங்கிவைக்கப்படுமென தமன பிரதேச செயலாளர் உதார நாணாயக்கார கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்