அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் இடம்​பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் இடம்​பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் இடம்​பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2021 | 10:56 am

Colombo (News 1st) செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமையே நாட்டின் மிகப்பெரிய சக்தி எனவும் அவர் கூறியுள்ளார்.

இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் 6 நிமிட காணொளியொன்றை வௌியிட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த 2,977 மக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஒற்றுமை என்பது ஒரு போதும் உடைக்கப்பட முடியாதது என்பதை இதன் ஊடாக கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட நிவ்யோர்க், பென்டகன், பென்சில்வேனியா பகுதிகளுக்கு ஜனாதிபதி மற்றும் முதல் பெண் ஆகியோர் இன்று (11) செல்லவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்