இந்துக்களால் போற்றப்படும் விநாயக சதுர்த்தி இன்று (10) 

by Staff Writer 10-09-2021 | 9:00 AM
Colombo (News 1st) விக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக போற்றப்படும் 'விநாயகர் சதுர்த்தி' இன்றாகும் (10). மாதந்தோறும் விநாயகர் சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகின்ற விநாயகர் சதுர்த்தியானது, தனிச்சிறப்பு வாய்ந்தது என இதிகாசங்கள் கூறுகின்றன.