துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை சீனாவிற்கு விற்க வேண்டாம் – துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்கம்

துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை சீனாவிற்கு விற்க வேண்டாம் – துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்கம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2021 | 8:24 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை தெற்காசிய சேவைகள் விநியோக மத்திய நிலையம் எனும் பெயரை கொண்ட கூட்டு முதலீட்டு வேலைத் திட்டத்துக்காக சீன நிறுவனமொன்றிடம் கையளிக்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு துறைமுக ஒன்றிய தொழிற்சங்க அமைப்பு, ஜனாதிபதியைக் கோரியுள்ளது.

கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர்கள், துறைமுக எதிர்கால அபிவிருத்தி உபாய மார்க்கங்களுக்கு தேவையான மிகவும் உணர்வுபூர்வமிக்க இடங்களிலுள்ள காணிகளை எக்காரணத்துக்காகவும் விற்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்