2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2021 | 1:19 pm

Colombo (News 1st) வத்தளை – வனவாசல வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 666 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்