களுத்துறையில் 18 மணி நேர நீர் வெட்டு

களுத்துறையின் பல பிரதேசங்களில் 18 மணி நேர நீர் வெட்டு

by Staff Writer 09-09-2021 | 4:35 PM
Colombo (News 1st) களுத்துறையின் சில பிரதேசங்களில் நாளை (10) காலை 8 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டி, களுத்துறை (வடக்கு/தெற்கு), கட்டுகுருந்த, நாகொட, பெந்தொட்ட, பயாகல, பேருவளை, போம்புவல, அளுத்கம, தர்காநகர், பிலிமினாவத்தை, கலுவாமோதரை, மொரகல்ல உள்ளிட்ட பகுதிகளிலிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.