இந்தோனேசியாவின் Tangerang சிறைச்சாலையில் தீ; 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் Tangerang சிறைச்சாலையில் தீ; 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் Tangerang சிறைச்சாலையில் தீ; 41 கைதிகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2021 | 9:22 am

Colombo (News 1st) இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா நகருக்கு அருகாமையிலுள்ள Tangerang சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 41 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தின் போது அதிகமான கைதிகள் உறக்கத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

40 இற்கும் அதிகமானோர் தங்கக்கூடிய வசதி கொண்ட அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள Block C இல் 122 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது உயிரிழந்த கைதிகளில் போர்த்துக்கல் மற்றும் தென் ஆபிரிக்காவை சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்தில் 08 பேர் படுகாயமடைந்துள்ள அதேநேரம், பலர் காயமடைந்துள்ளதாக அமைச்சர் Yasonna Laoly தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்