by Staff Writer 08-09-2021 | 8:34 PM
Colombo (News 1st) ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் ( NMRA) தரவுகள் கட்டமைப்பு அழிந்தமை தொடர்பாக தரவுகள் கட்டமைப்பை நிர்வகித்த தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கத்தினால் இன்று (08) மாலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.