by Staff Writer 08-09-2021 | 9:24 PM
Colombo (News 1st) பிரசித்தி பெற்ற வேளாங்கன்னி பேராலய ஆண்டு திருவிழாவின் பிரதான நிகழ்வான திருச்சொரூப பவனி நேற்று (07) பக்தர்களின்றி இடம்பெற்றது.
'கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர்' என அழைக்கப்படும் வேளாங்கன்னியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவில் பிரதான நிகழ்வாக நேற்று இரவு 7 மணியளவில் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
வழமையாக திருச்சொரூப பவனியின் போது, ஏழு திருச்சொரூப பவனி வரிசையாக நின்று அணிவகுத்துச் செல்லும்.
இம் முறை மிக்கேல் தேவதூதர், புனித சூசையப்பர், ஆரோக்கிய மாதா உள்ளிட்ட திருச்சொரூப பவனி மாத்திரமே பேராலயத்தை சுற்றி பவனி வந்தன.
திருச்சொரூப பவனியை இணையத்தளம் மூலம் உலகிலுள்ள பக்தர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.