இத்தாலி விஜயத்தின் போது பிரதமர் பாப்பரசரை சந்திப்பதில்லை – வௌிவிவகார அமைச்சு

இத்தாலி விஜயத்தின் போது பிரதமர் பாப்பரசரை சந்திப்பதில்லை – வௌிவிவகார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2021 | 6:33 pm

Colombo (News 1st) பிரதமரின் இத்தாலி விஜயம் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் வௌிவிவகார அமைச்சு இன்று (08) பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசரை சந்திக்க வேண்டும் என பிரதமர் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை எனவும் வத்திக்கானிடம் இருந்து அவ்வாறு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மாநாடொன்றின் பிரதம உரையாற்றுவதற்காக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாக கடந்த 06ஆம் திகதி வௌிவிவகார அமைச்சர் தௌிவாக கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (08) இரவு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நோக்கி பயணிக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்