முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவிய நால்வர் கைது

தமிழகத்திலிருந்து நாடு திரும்ப முயன்ற முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவிய நால்வர் கைது

by Staff Writer 07-09-2021 | 10:36 PM
Colombo (News 1st) தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்ப முயற்சித்த முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேலும் நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்னைக்கு சென்று, 03 ஆண்டுகளாக உறவினர் வீட்டில் இலங்கையை சேர்ந்த பெண் தங்கியிருந்துள்ளார். படகு மூலம் நாடு திரும்பும் நோக்கில் தரகர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை அருகே உள்ள மணல்திட்டு பகுதிக்கு வந்துள்ளார். இலங்கை படகிற்காக காத்திருந்தபோதும் படகு வராத நிலையில் பல மணி நேரம் அவர் நிர்க்கதியாகியிருப்பதை அவதானித்த தமிழக மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதன் பின்னர் நாடு திரும்பவிருந்த பெண் கைது செய்யப்பட்டதுடன் அவர் வழங்கிய தகவலையடுத்து அவர் படகின் மூலம் செல்வதற்கு உதவி செய்த நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.