தொட்டிலில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த 11 வயது சிறுமி – தெரணியகலையில் சம்பவம்

தொட்டிலில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த 11 வயது சிறுமி – தெரணியகலையில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2021 | 7:41 pm

Colombo (News 1st) கேகாலை மாவட்டம் மாலிபொட தோட்டத்தின் நிந்தகம பிரிவில் தொட்டிலில் சிக்கி 11 வயது சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கேகாலை – தெரணியகலை, மாலிபொட தோட்டத்தில் நேற்று (06) மாலை 4 மணியளவில் தனது வீட்டிலுள்ள தொட்டிலில் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தொட்டிலில் சிக்குண்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொட்டிலில் சிக்குண்ட சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தடவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்