கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை

கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை

கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2021 | 12:19 pm

Colombo (News 1st) கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார்.

கர்ப்பிணி தாயொருவருக்கு எப்படியாவது கொரோனா தொற்று ஏற்படுமாயின், சாதாரண நபரொருவர் தொற்றுக்குள்ளாவது போலன்றி அதிக சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவது முக்கியம் என கூறிய விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா, அவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்