ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2021 | 10:26 am

Colombo (News 1st) 2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்