பிரித்தானியாவின் LTTE மீதான தடை நீடிப்பு மகிழ்ச்சியளிக்கிறது: G.L. பீரிஸ்

by Staff Writer 06-09-2021 | 6:29 PM
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் தாம் இணைய வழியில் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்தார். நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாக G.L. பீரிஸ் குறிப்பிட்டார். பயங்கரவாதம் தொடர்பில் அனைத்து நாடுகளும் தௌிவடைந்துள்ளதாகவும் அண்மையில் LTTE அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். இதனிடையே, இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக 5 கட்சிகள் இணைந்து மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு தமது நிலைப்பாட்டினை தனித்து அறிவிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.