இயக்குநர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகம்

இயக்குநர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகம்

by Bella Dalima 06-09-2021 | 3:01 PM
தமிழில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கரின் மகள் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் கார்த்தி, கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்கும் படத்தை சூர்யா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘விருமன்’ என்று தலைப்பிட்டு முதற்பார்வை போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தின் போஸ்டர்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.