பஞ்ஷிர் மாகாணத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள்

பஞ்ஷிர் மாகாணத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள்

பஞ்ஷிர் மாகாணத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள்

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2021 | 5:47 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் மாகாணத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வராமலிருந்த ஒரேயொரு இறுதி பிராந்தியமான, தலைநகர் காபூலுக்கு வடக்கே அமைந்துள்ள இந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் கடுமையான மோதல் இடம்பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் முழுவதும் தமது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக தலிபான்களின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த உரிமை கோரலை தலிபான்களுக்கு எதிராக போராடி வரும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி நிராகரித்துள்ளது.

எனினும், குறித்த மாகாண ஆளுநர் மாளிகை வாயில் முன்பாக தலிபான் போராளிகள் நிற்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

இந்த நிழற்படங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்