அடிப்படைவாத கொள்கையுடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை

அடிப்படைவாத கொள்கையுடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை

அடிப்படைவாத கொள்கையுடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2021 | 10:33 am

Colombo (News 1st) அடிப்படைவாத கொள்கையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு தரப்பினரிடம் வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அடிப்படைவாத கொள்கைகள் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் சில அமைப்புகளை தொடந்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்