SLvsSA 2nd ODI: 67 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

SLvsSA 2nd ODI: 67 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

SLvsSA 2nd ODI: 67 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

05 Sep, 2021 | 10:56 am

Colombo (News 1st) இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் Duckworth Lewis முறையில் 67 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது.

மழை காரணமாக 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 6 விக்கட்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றது.

Janneman Malan 121 ஓட்டங்களையும் Reeza Hendricks 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

284 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணியின் முதல் மூன்று விக்கட்களும் 19 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும் முயற்சியில் சரித் அசலன்க ஈடுபட்டிருந்த போதிலும், மறுமுனையில் விக்கட்கள் சரிந்த வண்ணமிருந்தன.

25 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை இலங்கை பெற்றிருந்த போது, மழையினால் ஆட்டம் தடைப்பட்டது.

போட்டி மீள ஆரம்பித்த போது, இலங்கை அணியின் வெற்றியிலக்கு Duckworth Lewis முறைப்படி 41 ஓவர்களில் 265 என நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் 36.4 ஓவர்களில் அனைத்து விக்கட்களையும் இழந்து 197 மாத்திரமே பெற்று இலங்கை அணி தோல்வியடைந்தது.

சரித் அசலன்க 77 ஓட்டங்களையும், சாமிக கருணாரத்ன 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் Tabraiz Shamsi 5 விக்கட்களை வீழ்த்தினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக Janneman Malan தெரிவானார்.

இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் 1-1 என சமனானது.

தொடரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை மறுதினம் (07) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்