கொழும்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை (06) முதல் தடுப்பூசி

by Bella Dalima 05-09-2021 | 3:03 PM
Colombo (News 1st) கொழும்பு 1 முதல் 15-இற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான COVID தடுப்பூசி ஏற்றும் பணி நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கிணங்க, சீன தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட 6 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு - சுகததாச விளையாட்டரங்கு, ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், போர்ப்ஸ் வீதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபம், கெம்பல் பூங்கா, நாரஹென்பிட்டி ஷாலிகா மண்டபம் மற்றும் வௌ்ளவத்தை ரொக்ஸி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நாளை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதேவேளை, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களில் வசிக்கும் 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கும் COVID தடுப்பூசி ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.